செய்திகள்

வீட்டில் தனிமையில் வசித்தவர் எலும்புக் கூடாக மீட்பு ( படங்கள்)

கொழும்பு வெலிக்கடை பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து எலும்புக் கூடொன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் மாலை இந்த எலும்புக் கூடு மீட்கப்பட்டுள்ளதுடன் அது அந்த வீட்டில் தனிமையில் வசித்த 55 வயது நபருடையது என நம்பப்படுகின்றது.
குறித்த நபர் தனது மனைவி பிள்ளைகளை பிரிந்து  அந்த வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்கலாக அவரை காணாத உறவினரொருவர்  அந்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்து எலும்புக்கூடாக இருப்பதனை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அதனை தொடரந்து அங்கு சென்ற பொலிஸார் அந்த எலும்புக் கூட்டை மீட்டுள்ளனர்.
அந்த நபர் கடைசியாக அணிந்திருந்த ஆடையுடன் கட்டிலொன்றில் எலும்புக் கூடாக கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் உயிரிழந்து எலும்புக் கூடாக மாறும் வரை அந்த வீட்டுக்கு அருகில் இருப்பவர்களுக்கு அது தெரியாமல் போனது ஆச்சரியமானது என தெரிவிக்கும் பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
02
01