செய்திகள்

வீட்டுத்திட்டத்தில் முறைகேடுகளைக் களையக்கோரி ஜனாதிபதியிடம் மகஜர் கையளிக்க தீர்மானம்

இந்திய மீள்குடியேற்ற வீட்டுத்திட்டம் கிடைக்காதோர் தமக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிகைள வெளிபப்டுத்தும் நோக்கோடு ஜனாதிபதிக்கு மகஜரொன்றினை கைளிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீள்க்குடியேறியோர் நலன்பேணும் அமைப்பும் வவுனியா மாவட்ட பிரஜைகள்குழுவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இம் மகஜர் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் 11 ஆம் திகதி புதன்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

எனவே இந்திய வீட்டுத்திட்டம் உட்பட வீடுகள் கிடைக்காதோர் அனைவரையும் எதிர்வரும் புதன்கிழமை இம் மகஜர் கைளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு கோரியுள்ளது.