செய்திகள்

வீட்டு வாசலில் கிடந்த மோட்டார் குண்டு மீட்பு!

அரியாலை பகுதியில் முள்ளி வீதி உள்ள வீட்டு வாயிலின் முன்பாக மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி வீட்டு உரிமையாளர் உடனடியாக யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதன் பிரகாரம், இராணுவத்தினருக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து குண்டினை மீட்டுள்ளனர்.