செய்திகள்

வீதியில் நடந்து சென்ற வயோதிப மாது திடீரென விழுந்து பலி (படங்கள்)

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா பிரதேசத்தில் பாதையில் சென்று கொண்டிருந்த 73 வயதுடைய வயோதிப மாது ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த பிரதேசத்திலிருந்து டிக்கோயா வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் 21.05.2015 இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் டிக்கோயா கொலனி பகுதியை சேர்ந்த பி.மாரியாயி 73 வயது என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாமா அல்லது வேறு எதுவும் காரணமா என அட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

DSC09373

DSC09378

DSC09382