வீதி விபத்தில் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் படுகாயம்
மட்டக்களப்பு மகிழடித்தீவில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மகிழடித்தீவு-கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் மீனாட்சிமரத்தடி எனுமிடத்தில் துவிச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இச்சம்பவத்தில் துவிச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றில் பயணம் செய்த இருவரும் காயமடைந்த நிலையில் மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடனர்.
அதேவேளை, துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்த எஸ். யோகராசா (வயது 42) என்பவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றுப்பட்டுள்ளதாக மகிழடித்தீவு வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
n10