செய்திகள்

வீரபாண்டிய கட்டபொம்மனை கைப்பற்றிய மலேசியா பாண்டியன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் அந்த காலத்திலேயே பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட்டானது,

சிவாஜியின் நடிப்பை வடமாநில நடிகர்கள் வியந்து பார்த்த காலம் அது. தற்போது வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் திரையில் வெளிவரவுள்ளது.

இப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை மலேசிய வாழ் தமிழர் மலேசியா பாண்டியன் SPV AV INTERNATIONAL சார்பில் வாங்கியுள்ளார்.