செய்திகள்

வுஹானில் சிக்கியுள்ள மாணவர்களை அழைத்து வர புறப்பட்டது ஶ்ரீ லங்கன்

சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவும் வுஹான் பிராந்தியத்திருள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 1422 என்ற சிறப்பு விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது.
அங்கு 33 இலங்கை மாணவர்கள் தங்கியிருப்பதுடன் அவர்கள் இந்த விமானம் மூலம் அழைத்து வரப்படவுள்ளனர்.
இவர்கள் இலங்கையை வந்தடைந்த பின்னர் அங்கிருந்து விசேட பஸ் மூலம் தியத்தலாவையில் அமைக்கப்பட்டுள்ள விசேட முகாமுக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்து செல்லப்படவுள்ளனர்.
சீனாவிலிருந்து 580 பேர் தற்போதைய நிலையில் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. -(3)