செய்திகள்

வெசாக் கால விபத்துக்களில் இருவர் பலி 32பேருக்கும் அதிகமானோர் காயம்

வெசாக் தோரணங்களை பார்க்கச் சென்ற போது நேற்று இரவு இடம்பெற்ற பல்வேறு விபத்துக்களில் சிக்கி இரவர் உயிரிழந்துள்ளதுடன் 32 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இவ்வாறாக கருவலகஸ்வெவ மற்றும் மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற இரு வேறு வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் சில வானக விபத்துக்களில் 32பேர் காயமடைந்துள்ளனர்.