செய்திகள்

வெசாக் தினமன்று அரச சாராயம் விற்ற 60 வயது முதியவர் யாழில் கைது

வெசாக் தினமான நேற்று முன்தினம் திங்கட்கிழமை (04.5.2015) அரச சாராயத்தை யாழ்.கஸ்தூரியார் வீதியிலுள்ள விற்பனை நிலையமொன்றில் மறைத்து வைத்து விற்பனை செய்த முதியவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்தனர்.

கஸ்தூரியார் வீதியிலுள்ள பழைய போத்தல்களை விற்பனை செய்யும் நிலையத்தில் அரச சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த போதே தெணியாய பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய முதியவரை யாழ்.பொலிஸார் கைது செய்தனர்.

அத்துடன் விற்பனைக்குத் தயாராக வைத்திருந்த 180 மில்லி லீற்றர் கொள்ளளவு கொண்ட 310 போத்தல் அரச சாராயத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரைக் காவலில் வைத்து விசாரணை நடாத்திய பொலிஸார் நேற்றுச் செவ்வாய்க்கிழமை யாழ்.நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.

யாழ் நகர் நிரூபர்-