செய்திகள்

‘வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்’

இலங்கையில் தீவிரவாதமும், இனவாதமும் மீண்டும் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்டகப்பட்ட சம்பவம் தொடர்பில், கொழும்பில் இன்று நடந்த வைபவமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த வெடிபொருட்கள் பற்றி முறையான விசாரணை நடத்தும்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தன்னை தொடர்புக்கொண்டு கோரிக்கை விடுத்துள்ளார் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சாவகச்சேரி சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணைகள் நடந்துவரும் நிலையில், வரும் வாரத்தில் இது பற்றி நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

போர் நடந்த பகுதிகளில், போருக்கு பின்னர் ஆயுதங்கள் மீட்கப்படுவது வழமையானது என தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அங்கு கண்டெடுக்கப்படும் ஆயுதங்கள் பற்றி வட பகுதியிலுள்ள தமிழ் மக்கள் தொடர்ந்தும் தகவல்களை வழங்கி வருகின்றனர் எனவும் கூறினார்.

இலங்கையில் தீவிரவாதிகள் அல்லது வேறு குழுவினர் செயற்படுகிறார்களா என்பது தொடர்பில் விசாரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதமர் ரணில் தெரிவித்தார்.

n10