செய்திகள்

வெடிப்பு சம்பவத்தில் இரண்டு இராணுவத்தினர் காயம்

மன்னார் மடு பிரதேசத்தில் கண்ணிவெடிகளை செயலிழக்க செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் கோப்ரல் ஒருவர் உட்பட இரண்டு இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.
புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியொன்றை செயலிழக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போதே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.