செய்திகள்

வெற்றிப்பட இயக்குனரின் இறைவி படப்பிடிப்பு ஆரம்பம்

அட்டக்கத்தி, பிட்சா, சூதுகவ்வும், வில்லா (பிட்சா 2), மூண்டாசுப்பட்டி, சரபம், எனக்குள் ஒருவன் உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை தயாரித்துள்ள திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்த சீவி குமார், ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமான முறையில் புதிய படம் ஒன்றை தயாரிக்கின்றார்.

இறைவி எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை பிட்சா, ஜிகர்தண்டா வெற்றி படங்களை இயக்கிய கார்த்திக் சூப்புராஜ் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

முதன்முறையாக விஜய் சேதுபதி, SJ சூர்யா, பாபி சிம்ஹா இணைந்து நடிக்கும் இப்படத்தில் இவர்களுடன் அஞ்சலி, கருணாகரன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இசை சந்தோஷ் நாரயணன். சென்னையில் இன்று SJ சூர்யா, பாபி சிம்ஹா நடித்த காட்சியுடன் படப்பிடிப்பு துவங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடக்கவுள்ளது.