செய்திகள்

வெலிகடை சிறைச்சாலைக்கு விஷேட அதிரடிப்படையை அனுப்பியது கோதாவா?

 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வெலிகடை சிறைச்சாலையில் நடந்த கலவரம் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு நேற்று மீண்டும் ஆரம்பமானது.

ஏற்கனவே இக்குழு சமர்பித்த விசாரணை அறிக்கையை கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையிலேயே மீண்டும் புதிய மைத்திரி அரசு விசாரணையை ஆரம்பித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோதபாய ராஜபக்சவின் உத்தரவிற்கு அமையவே விஷேட அதிரடிப்படை வெலிகடை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டதாக வெளியாகியிருந்த செய்திகள் தொடர்பாகவும் இக்குழு நேற்று ஆராய்ந்தது.