செய்திகள்

வெலிகமவில் வீடொன்றில் தீ: 8 வயது சிறுமி மரணம்!

மாத்தறை, வெலிகம பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

வீட்டில் தீ பரவிய சந்தர்ப்பத்தில் வீட்டில் தந்தை, தாய் இரண்டு சிறுமிகள் மற்றும் பாட்டி ஆகியோர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, அயலவர்களால் ஏனையோர் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட போதிலும், குறித்த 8 வயது சிறுமியை மீட்க முடியாமற்போயுள்ளது.

தீவிபத்து சம்பவம் எவ்வாறு நடந்தது என்று தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
-(3)