செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் கூரை மீது இருந்து சத்தியாக்கிரகப் போராட்டம்!

தமது தண்டனையை குறைக்குமாறு வலியுறுத்தி கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று பிற்பகல் முதல் சிறைச்சாலையின் கூரை மீதேறி 10 கைதிகள் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
-(3)