செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜாக்ஷ அங்குள்ள விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி சிறைச்சாலைக்கு முன்னாளுள்ள பேஸ் லைன் வீதியில் ஆங்காங்கே பொலிஸாரும் கலகம் அடக்கும் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரின் ஆதரவாளர்கள் குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்தக்கூடும் என்ற காரணத்தினாலே அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.