செய்திகள்

வெலிக்கடை சிறை தாக்குதல்: விசாரணை அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

வெலிக்கடை சிறைச்சாலை தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளவென நீதியமைச்சரினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு தனது அறிக்கையை நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தது. அறிக்கையிடும் பொருட்டு மூவரடங்கிய குழுவை நியமித்தார்.

ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதியரசர் சமல் நம்புவசம் தலைமையிலான இந்த குழுவில் ஓய்வுபெற்ற சீரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அசோக்க விஜேதிலக்க மற்றும் ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரியான சட்டத்தரணி எஸ். ககேக்க லியனகே ஆகியோர் அங்கம் வகித்தனர். மேற்படி குழுவினர், வெலிக்கடை மோதல் குறித்து கடந்த

05 மாதங்களாக விரிவான விசாரணை களை நடத்தி சம்பவத்திற்கு காரண மாகவிருந்த சகல தரப்பினரிடமிருந்தும் சாட்சியங்களை பதிவு செய்து அதன் முழுமையான அறிக்கையை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினூடாக பிரதமரிடம் அறிக்கை கையளித்துள்ளனர்.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களுக்கமைய பிரதமரால் வழங்கப்படும் பணிப்புரைகள் நடவடிக்கைகளுக்கு எடுக்கப்படுமென நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அறிக்கை கையளிக்கப்படும் சந்தர்ப்பத்தில் நீதியமைச்சின் செயலாளர் கமலினி சில்வாவும் கலந்து கொண்டார்.