செய்திகள்

வெல்லாவெளியில் மண் அகழ்ந்தோர் கைது

மட்டக்களப்பு, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணேசபுர பிரதேசத்தில் சட்ட விரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்ட மூவரையும் பிணையில் செல்ல களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கடந்த 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மண்டூர் கணேசபுரத்தில் கடந்த சில காலங்களாக சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி மண் வளமுள்ள இடங்களில் இருந்து மண்ணை ஏற்றி பிறிதோரு இடத்தில் சேமித்து வைத்து விற்பனை செய்வதற்காக டிப்பர் ரக வாகனத்தில் ஏற்றும் போது பொலிஸாரினால் சம்பவ இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட வாகன சாரதி மற்றும் உதவியாளர்கள் இருவர் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் நேற்று புதன்கிழமை அஜர் படுத்தப்பட்ட பின்னர் 50000 ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதாகவுமு; சுரங்க மற்றும் கனிப்பொருள் மாவட்ட திணைக்களத்திற்கு மண்ணை கணிப்பீடு செய்வதற்கு உத்தரவு பிறப்பித்;துள்ளதாகவும் வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்;தனர்.

சுரங்க கனிப்பொருள் அதிகாரிகளின் அறிக்கை சமர்ப்பிற்கும் வரைக்கும் உரிய இடத்திற்கு பொலிஸார் பாதுகாப்பிற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் வெல்லாவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

IMGA0001 (2) IMGA0006 IMGA0014