செய்திகள்

வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட பணத்தை கொண்டுவர நடவடிக்கை

முன்னைய ஆட்சியாளர்களால் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பெருந்தொகையான பணம் அரசாங்கத்தினால் மீட்கப்பட்டு அடுத்த ஒரு இரு வாரங்களுக்குள் இலங்கைக்குக் கொண்டுவரப்படலாம் என நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள பணம் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானிய அரசுகளின் உதவியுடன் அரசாங்கம் மேற்கொண்ட விசாரணைகளில் பெருமளவு முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னைய ஆட்சியாளர்களின் முக்கிய குடும்ப உறுப்பினர் ஒருவர் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்ட போதிலும், அவரின் நடமாட்டம் வெளிநாட்டு புலனாய்வு நிறுவனங்கள் மூலம் அவதானிக்கப்பட்ட தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பின்னணியில் முக்கியமான தகவல்கள் சிலவற்றை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்த அரசு தயாராகி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர் இந்தத் தகவல்களை வெளிப்படுத்துவதில் அரசு தரப்பு தீவிரமாகவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.