செய்திகள்

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்த அமெரிக்க குழு இலங்கை வந்தது

கடந்த அரசாங்கத்தில்  அரசியல்வாதிகளினால் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள சொத்துக்கள் தொடர்பாக  ஆராயும் நடவடிக்கைளுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் அமெரிக்காவின் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுக்கின்றது.
இவர்கள் பொலிஸ் திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணை  பிரிவின் அதிகாரிகளை சந்தித்துள்ளனர்.
நிதிக் குற்றச் செயல்கள் தொடர்பிலான தகவல்கள் மற்றும் சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ளத் தேவையான தொழில்நுட்ப வழிமுறைகள் மற்றும் ஏனைய வசதிகளை இலங்கை அதிகாரிகளுக்கு வழங்க இந்த குழுவினர் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியிடம்  இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய அந்த குழுவினர் இங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.