செய்திகள்

வெளிநாடுசெல்ல அனுமதியளிக்காவிட்டால் 20 ஆயிரம் பணியாளர்கள் பாதிப்படைவர்

காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் ஆயுதங்கள்  மீட்கப்பட்டமை  காரணத்துக்காக  அவன்காட் தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் தலைவருக்கு வெளிநாடுகள் செல்ல நீதிமன்றத் தடை விதித்திருந்தது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை ஆரம்பமானபோது அவன்காட் தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் தலைவரான முன்னாள் இராணுவ மேஜர் நிஷங்க சேனாதிபதி சார்பில் இவர் வெளிநாடுசெல்ல அனுமதியளிக்காவிட்டால், 20 ஆயிரம் பணியாளர்கள் பாதிப்படைவர்
என்றும் அவர்கள் தமது பணியை இழக்க நேரிடலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த வழக்கை ஆராய்ந்த கொழும்பு மாவட்ட  நீதிமன்றம் 3 மாத காலத்திற்கு மேஜர் நிஷங்க சேனாதிபதிக்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதியினை வழங்கியது.