செய்திகள்

வெளிநாடு செல்ல முயன்ற 35 தமிழர்கள் கைது

மாத்தறை மற்றும் வெலிகமவிலிருந்து வெளிநாட்டுக்கு செல்வதற்கு முயன்ற தமிழர்கள் 35 பேரை இவ்விரு பொலிஸ் பிரிவுகளின் கடற்கரை பொலிஸ் பிரிவு இன்று புதன்கிழமை காலை கைதுடிசெய்துள்ளது.

சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மாங்குளம் மற்றும் ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேசங்கள் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மிரிஸ்ஸ துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து உலருணவு பொதிகள் மற்றும் மருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.