செய்திகள்

வெளிநாட்டில் இருந்து வந்தவரும் அவரின் மனைவியும் வவுனியாவில் தீ விபத்தில் சிக்கினர்: மனைவி பலி, கணவன் படு காயம்

வெளிநாடொன்றில் இருந்து அண்மையில் மனைவியை பார்ப்பதற்காக இலங்கை வந்த ஒருவரும் அவரது மனைவியும் எரிந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று மாலை அனுமதிக்கப்பட்டனர். வைத்தியசாலையில் சிகிற்சை பலனலிக்காமல் மனைவி உயிரிழந்ததுடன் கணவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வவுனியா உக்குளாங்குளத்தில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது.

வீட்டில் அறையொன்றில் இருந்த கட்டில் உட்பட பொருட்கள் முழுமையாக எரிந்து காணப்பட்டதுடன் அயலவர்களினால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வரப்பட்டுள்ளது.

இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

DSC08202 DSC08203