செய்திகள்

வெளிநாட்டில் தொழில்புரியும் தாய்மாரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் வெளிநாட்டில் தொழில்புரியும் தாய்மாரின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் உதவிப்பணம் வழங்குவதற்கு இவ்வாண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் உதவிப்பணம் வழங்குவதற்கான விண்ணப்ப முடிவுத்திகதி மார்ச் மாதம் 31ஆம் திகதியாகும். இத்திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க விரும்புவோர் சமர்ப்பிக்கலாம் என கேட்கப்பட்டுள்ளனர்.

இதில் 2014 ஆம் ஆண்டு 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் 2013ஆம் ஆண்டு க.பொ.த.(சாஃத) மற்றும் (உஃத) பரீட்சைகளில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இவ் உதவிப்பணம் கிடைக்கவுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் யாவையும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன் முகாமையாளர் (நலன்புரி) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், இல.234, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, கொஸ்வத்தை, பத்தரமுல்லை எனம் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பும்படி கேட்கப்பட்டுள்ளது.