செய்திகள்

வெளிநாட்டில் நிதிப் பதுக்கலை கண்டுபிடிக்க இந்தியா, இங்கிலாந்தின் நிதிபுலனாய்வு நிபுணர்களின் உதவியை பெற திட்டம்

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ள பில்லியன் கணக்கான நிதியை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவரும் நோக்கில் இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நிதி புலனாய்வு நிபுணர்களின் உதவி பெறப்படும் என அமைச்சர் ராஜிதசேனாரட்ண தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் –

வெளிநாடுகளில் வைக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் தங்களுக்கு தகவல்கள் வந்துகொண்டிருப்பதாகவும் இதன் பொருட்டு புதிய அரசாங்கமானது ஊழல் எதிர்ப்புக்குழு ஒன்றை நியமித்துள்ளது என்றும் இந்தக் குழுவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்குவதுடன் அமைச்சர்கள், எம்.பிகள், சட்டத்தரணிகள் என்று பதினொருபேர் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்திய மத்திய வங்கியின் நிதி உளவுப் பிரிவின் உதவி பெறப்படுவதோடு உலக வங்கியின் சர்வதேச நிதி நிறுவனங்கள் என்பவற்றின் ஆதரவும் பெறப்படும் எனவும் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றவர்களை சர்வதேச பொலிசாரின் உதவியுடன் இலங்கைக்கு வரவழைப்போம் என்றும் தெரிவித்தார்.