செய்திகள்

வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியாததால் பதவியிலிருந்து அகற்ற முயற்சி: இறுதிக் கூட்டத்தில் மகிந்த

வெளிநாட்டு அழுத்தங்களுக்கு, அடிபணிய மறுத்ததால், சில மேற்கு நாடுகள் தன்னை பதவியில் இருந்து அகற்ற முயற்சிப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார். வடக்கில் இருந்து இராணுவத்தைக் குறைக்கும்படி தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட போதும் அதனைத் தான் நிராகரித்து விட்டதாகவும், தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளரான மகிந்த ராஜபக்ஷவின் இறுதிப் பரப்புரைக் கூட்டம் நேற்றிரவு கஸ்பேவவில் இடம்பெற்றது. ஆளும்கட்சியின் முக்கிய தலைவர்கள் இல்லாமல் மகிந்த ராஜபக்ஷ இறுதிப் பரப்புரை மேடையில் அமர்ந்திருந்தார். விமல் வீரவன்சவும், உதய கம்மன்பிலவும் மட்டுமே அவர் அருகில் மேடையில் அமர்ந்திருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய மகிந்த, தாம் வெற்றி பெற்ற பின்னர் எதிர்க்கட்சியினரைப் பழிவாங்கக் கூடாது என்று தமது ஆதரவாளர்களிடம் கோரியிருந்தார். தனது வெற்றி உறுதி என்று குறிப்பிட்ட அவர், மீண்டும் ஒரு முறை நாட்டைப் பிரிப்பதற்கு தான் அனுமதிக்க மாட்டேன் என்றும் கூறினார்.

வெளிநாட்டு அழுத்தங்களுக்கு, அடிபணிய மறுத்ததால், சில மேற்கு நாடுகள் தன்னை பதவியில் இருந்து அகற்ற முயற்சிப்பதாகவும் மகிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டினார். வடக்கில் இருந்து இராணுவத்தைக் குறைக்கும்படி தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட போதும் அதனைத் தான் நிராகரித்து விட்டதாகவும், தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.