செய்திகள்

வெளிநாட்டு ஆயுதங்களுடன் ஒருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுடன், உடுவெல பிரதேசத்தில் நபரொருவர் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்ட சோதனையையடுத்து சந்தேகநபர், ஆயுதங்களுடன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாகொடை பிரதேசத்தைச்சேர்ந்த 25 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை, காலி மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.