செய்திகள்

வெளிநாட்டு தூதுவர்களாக 9 பேர் நியமனம்

வெளிநாட்டு தூதுவர்களாக 9 பேர் நியமனம்
முன்னாள் இராணுவ தளபதிகள் உட்பட  9பேர் வெளிநாட்டு தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி முன்னாள் இராணுவத் தளபதிகளான ஜகத் ஜயசூரிய பிரேசில் தூதுவராகவும் தயா ரத்நாயக்க பாகிஸ்தான் தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் முன்னாள் வெளிவிவகார செயலாளர் சேனுகா செனவிரத்ன தாய்லாந்து தூதுவராகவும் ஆர்.டி.ராஜபக்ஷ சுவீடன் தூதுவராகவும் கே.ஏ.ரோகனஜித் ஈரான் தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  பி.செல்வராஜ் இஸ்ரேல் தூதுவராகவும் கே.எம்.சதிக் நெதர்லாந்து தூதுவராகவும் எம்.கருணாதாஸ கட்டார் தூதுவராகவும் வி.திஸாநாயக்க வியட்நாம் தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.