செய்திகள்

வெளிநாட்டு நகைகளின் வருகையால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிப்பு (படங்கள்)

வெளிநாட்டு நகைகளின் வருகை மற்றும் இயந்திரங்களினால் நகைகள் உற்பத்தி செய்வதனால் உள்நாட்டில் நகைகள் உற்பத்தி செய்வோர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டள்ளதாக மட்டக்களப்பு நகரில் உள்ள நகைகள் செய்யும் பட்டறையொன்றில் தொழில் புரிவோவோர் கவலை தெரிவிக்கின்றனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

நகை உற்பத்தியாளாகள் கடந்த காலங்களில் தங்களது கைவினைத் திறன் மூலமும் மற்றும்
தங்களது சிந்தனையில் உருவாக்கப்பட்ட பாரம்பரிய நகைகளை செய்து விற்பனை செய்து வந்தனர்.

மரபு வழிரீதியாக பாரம்பரிய முறையில் செய்யப்பட்ட திருமாங்கல்யத்துக்குரிய தாலிக்கொடிகள், மாலைகள், பதக்கங்கள்,வளையல்கள், மோதிரங்கள், தோடுகள் மற்றும் கைச்செயின்கள் எல்லாம் தற்போது இயந்திரங்களினால் செய்யப்படுகின்றன. இதனால் இவர்கள் தொழில் இல்லா பிரச்சினைக்கு முகம் கொடுப்பதாகத் தெரிவித்தனர்.

கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள நகைக் கடைகளில் தற்பொழுது உள்ளுர் உற்பத்தி நகைகளுக்குப் பதிலாக இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் நகைகளே கூடுதலாக விற்பனை செய்யப்படுகின்றன எனவும் கூறினர்.

இதுபற்றி செட்டியார் தெருவில் உள்ள இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஆண்டி விஜயகுமாரிடம் கேட்டபோது,

வெளிநாட்டு மற்றும் இயந்திரங்கள் மூலம் செய்யப்படும் நகைகள் கூடுதலானவை புதிய டிசைன்களில் கூடுதல் கவர்ச்சியுடையனவாகவும் மற்றும் தங்கத்தை தங்கத்தால் ஒட்டும் தொழில் நுட்பத்தால் கழிவு இல்லாமலும் இருப்பதனால் வாடிக்கையாளர்கள் பணத்தின் பெறுமதியைப் பார்க்காமல் ஒரு பவுண் 22 கரட் தங்கத்திற்கு ரூபாய் 44,000 செலுத்தி தரத்தில் சிறந்த தங்க வைர நகைகளை வாங்குவதில் அதிகம் நாட்டம் கொண்டுள்ளனர்.

இதனால் உள்ளூர் நகை உற்பத்தியாளர்களுக்கு தொழில் குறைந்துள்ளதை ஏற்றுக் கொள்கின்றோம். அவர்களும் புதிய முறைக்கு மாற்றம் பெற்று இயந்திரங்கள் மூலம் நகைகளை செய்வதற்கு பழக்கப்படுத்திக் கொண்டால் தொழில் இல்லாப் பிரச்சினையை கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.

goldsmith (2)

goldsmith (3)

goldsmith (4)

goldsmith (6)

goldsmith (7)