செய்திகள்

வெளிநாட்டு வங்கிகளில் குடும்பத்தின் இரகசிய கணக்குகள் எதுவும் கிடையாது : மஹிந்த ராஜபக்ஷ

வெளிநாட்டு வங்கிகளில் தன்னுடையதோ , தனது குடும்பத்தினரதோ சட்டவிரோத அல்லது இரகசிய கணக்குகள் எதுவும் கிடையாதென முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கணக்ககள் வைத்திருப்பதாக தற்போதைய அரசாங்கத்;தில் இருப்போர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று வெளியிடப்பட்ட விசேட அறிக்கையொன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்படுள்ளது.
தற்போதைய அரசாங்கத்திலுள்ளவர்களால் எனக்கும் , என் மனைவிக்கும் மகன்களுக்கும் வெளிநாட்டு வங்கிகளில் பில்லியன் டொலர் பெறுமதியான இரகசிய மற்றும் சட்டவிரோத கணக்குகள் இருப்பதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன.
குறித்த வதந்திகள் ஊடகங்களில் மூலம் புதுப்பிக்கப்படுகின்றன. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் என் அரசியல் எதிரிகள் அவர்களுக்கு சாதகமான கருவியாக பயன்படுத்தப்படுவதாக தோன்றுகிறது.
எனவே வெளிநாட்டு வங்கிகளில் நானோ எனது மனைவியோ அல்லது பிள்ளைகளோ எந்தவொரு சட்டவிரோத அல்லது இரகசியக் கணக்குகளையும் வைத்திருக்கவில்லை என்பதை மக்களுக்கு கூற விரும்புகிறேன். என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.