செய்திகள்

வெளிவந்து சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்துவிட்டது சார்லிஹெப்டோ

உலகை உலுக்கிய படுகொலைகளுக்கு பின்னர் வெளிவந்துள்ள சார்லி ஹெப்டோ சஞ்சிகையை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுவதாக தகவல்கள் வெளியாகின்றன.

பிரான்சில் குறிப்பிட்ட சஞ்சிகையை வாங்குவதற்காக பெருமளவு மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். முதலில் 3 மில்லியன் பிரதிகள் அச்சிடப்பட்ட நிலையில் பெருமளவான பிரதிகள் வெளியாகி சில மணிநேரங்களில் விற்பனையாகிவிட்டதாகவும், அதனை தொடர்ந்து மேலும் 2 மில்லியன் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. குறிப்பிட்ட சஞ்சிகை வழமையாக 75000 பிரதிகளே அச்சிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இம்முறை சஞ்சிகை விற்பனைமூலம் திரட்டப்படும் நிதி உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இம்மறை சஞ்சிகை முகமது நபி கண்ணீர்விடுவது போன்ற அட்டைப்படத்துடன் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.