செய்திகள்

வெள்ளவத்தை கடலில் மிதந்த சடலம் கடற்படையினரால் மீட்பு (படங்கள்)

கொழும்பு, வெள்ளவத்தை ஐ.பி.சி. வீதியையடுத்துள்ள கடற் பகுதியில் மிதந்துகொண்டிருந்த சடலம் ஒன்று இன்று பகல் மீட்கப்பட்டுள்ளது. சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தமையைக் காண முடிந்தது.

கடற்படையினரால் சடலம் மீட்கப்பட்டு கரைக்குக் கொண்டுவரப்பட்டது. சமன் சந்திர குமார என்பவரது சடலமே இது என பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 50 வயதான இவரது மரணம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

2 (5)3 (5)