செய்திகள்

வெள்ளவத்தை ஹோட்டலொன்றிலிருந்து இந்திய தம்பதியின் சடலங்கள் மீட்பு

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்திருந்த இந்திய தம்பதியொன்றின் சடலங்களை பொலிஸார் நேற்று இரவு மீட்டுள்ளனர்.

36 வயதுடைய பெண்னொருவரினதும் , 37 வயதுடைய ஆணொருவரினதும் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் இந்த சடலங்களை மீட்டுள்ளர்.

இவர்கள் இருவரும் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பது தொடர்பாக இது வரை தெரிய வரவில்லையெனவும் இது தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.