செய்திகள்

வெள்ளிக்கிழமை அதிகாலை கொழும்பு வருகிறார் மோடி: சனிக்கிழமை யாழ். பயணம்

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு நாளை மறு­தினம் வெள்ளிக்­கி­ழமை இலங்கை வரு­கின்றார். இலங்­கையின் மிக நெருங்கிய அயல் நாடான இந்­தி­யாவின் பிர­தமர் ஒருவர் 28 வரு­டங்­க­ளுக்கு பின்னர் உத்­தி­யோக­பூர்வ அரச விஜ­யத்தை மேற்­கொண்டு இலங்கை வரு­கின்­றமை மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த விட­ய­மாக கரு­தப்­ப­டு­கின்­றது.

இந்­திய பிர­த­மரின் இலங்கை விஜ­யத்­தின்­போது பல்­வேறு முக்­கி­ய­மான விட­யங்கள் இடம்­பெ­ற­வுள்­ள­துடன் பல உடன்­ப­டிக்­கை­களும் இரண்டு நாடு­க­ளுக்கு இடையில் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளன.

மேலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­திகள் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் பிர­தி­நி­திகள் எதிர்க்­கட்சித் தலைவர் நிமால் சிறி­பால டி. சில்வா அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் பிர­தி­நி­திகள் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வர்கள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரையும் சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ளார்.

இலங்கை வர்த்­தக சம்­மே­ளனம் கொழும்பில் ஏற்­பாடு செய்­துள்ள வர்த்­தக மாநாட்­டிலும் இந்­திய பிர­தமர் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்ளார். அத்­துடன் நரேந்­திர மோடி யாழ்ப்­பாணம் தலை­மன்னார் மற்றும் அனு­ரா­த­புரம் ஆகிய பிர­தே­சங்­க­ளுக்கு விஜயம் செய்­ய­வுள்ளார். அத்­துடன் பாரா­ளு­மன்­றத்­திலும் இந்­திய பிர­தமர் உரை­யாற்­ற­வுள்ளார்.

இலங்­கையின் அர­சியல் தலை­வர்­க­ளு­ட­னான இரு­த­ரப்பு சந்­திப்­புக்­க­ளின்­போது நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் அர­சியல் தீர்வு விடயம் இரு­த­ரப்பு வர்­த­தக பொரு­ளா­தார உற­வுகள் முத­லீ­டுகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.

வௌ்ளிக்­கி­ழமை அதி­காலை 5.30 மணி­ய­ளவில் இந்­திய பிர­தமர் மோடி கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை வந்­த­டைவார். அங்கு அவ­ருக்கு மரி­யா­தையின் நிமித்­த­மான வர­வேற்பு அளிக்­கப்­படும். அத்­துடன் முப்­ப­டை­யி­னரின் அணி­வ­குப்பு மரி­யா­தையும் அவ­ருக்கு அளிக்­கப்­படும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான குழு­வினர் இந்­திய பிர­த­மரை விமான நிலை­யத்தில் வர­வேற்­க­வுள்­ளனர்.

அதன்­பின்னர் கொழும்பில் இந்­திய பிர­தமர் மோடி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­துவார். இந்த இரு­த­ரப்பு சந்­திப்­புக்­க­ளின்­போது பல்­வேறு விட­யங்கள் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்­தப்­படும். முக்­கி­ய­மாக இரண்டு நாடு­க­ளுக்கு இடை­ய­லான உறவை வலுப்­ப­டுத்துல் வர்த்­தக பொரு­ளா­தார உறவை மேம்­ப­டுத்தல் உள்­ளிட்ட பல­வேறு விட­யங்கள் குறித்து பேசப்­படும்.

அத்­துடன் தேசிய பிரச்­சி­னைக்­கான இனப்­பி­ரச்­சினை தீர்வு விவ­காரம் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் என்­பன குறித்து கலந்­து­ரை­யா­டப்­படும். இதன்­பின்னர் சில உடன்­ப­டிக்­கை­களும் இலங்கை இந்­திய நாடு­க­ளுக்கு இடையில் கைச்­சாத்­தி­டப்­படும். தொடர்ந்து ஜனா­தி­ப­தியும் இந்­தியப் பிர­த­மரும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் அறிக்­கை­களை வெளி­யி­டு­வார்கள்.

அத­னை­ய­டுத்து மகா­போதி சங்­கத்­துக்கு இந்­திய பிர­தமர் விஜயம் செய்வார். அதன்­பின்னர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இந்­திய பிர­ம­ருக்கு மதிய உணவு விருந்து அளிப்பார். மதிய உணவு விருந்தின் பின்னர் இலங்கை பிர­த­ம­ருடன் இந்­திய பிர­தமர் இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தை­களை நடத்­துவார். பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வு­ட­னான சந்­திப்­பின்­போது மீனவர் விவ­காரம் மற்றும் தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு விவ­காரம் என்­பன குறித்து விரி­வான பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­ப­ட­வுள்­ளன.

அத­னை­ய­டுத்து மாலை 3.15 மணிக்கு பிர­தமர் நரேந்­திர மோடி இலங்கை பாரா­ளு­மன்­றத்தில் விசேட உரை­யாற்­றுவார். இது மிக முக்­கி­ய­மான நிகழ்­வென்று குறிப்­பிட முடியும்.சில நாடு­களின் தலை­வர்கள் கடந்த காலங்­களில் இவ்­வாறு பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றி­யுள்­ளனர். ஆனால் இந்­திய பிர­தமர் இலங்கை பாரா­ளு­மன்ற உரை­யா­னது மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக அமையும். இதற்­காக பாரா­ளு­மன்றம் வௌ்ளிக­கி­ழமை விசே­ட­மாக கூட­வுள்­ளது. அனைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­ப­களும் குறித்த விசேட அமர்­வு­ககு வரு­கை­த­ரு­மாறு அழைக்­கப்­பட்­டுள்­ளனர்.

பாரா­ளு­மன்ற உரைக்குப் பின்னர் இந்­திய பிர­தமர் மோடி, பாரா­ளு­மன்ற உறுப்­பி்­னர்­க­ளுடன் குறு­கிய நேர சந்­திப்­பினை மேற்­கொள்வார். பாரா­ளு­மன்­றத்தில் இந்­திய பிர­த­ம­ருக்கு தேநீர் விருந்­து­ப­சாரம் அளிக்­கப்­ப­ட­வுள்­ள­து. .

அதன்­பின்னர் இந்­திய அமை­திப்­படை நினை­வி­டத்­துக்குச் செல்வார்.அங்கு அவர் உயிர்­நீத்த இந்­திய இரா­ணுத்­தி­ன­ருக்கு அஞ்­சலி செலுத்­துவார்.

வௌ்ளிக்­கி­ழமை மாலை இலங்கை வர்த்­தக சம்­மே­ள­னத்­தினால் ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்ள வர்த்­தக மாநாட்டில் பிர­தமர் மோடி கலந்­து­கொள்வார். கடந்த சில வரு­டங்­க­ளாக இந்­தி­யா­வி­னதும் இலங்­கை­யி­னதும் வர்த்­தக உறவு மிகப்­பெ­ரிய வளர்ச்­சியை அடைந்­துள்­ளது. வர்த்­தக மாநாட்டில் இந்­திய பிர­தமர் உரை­யாற்­றுவார். இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் எவ்­வாறு வர்த்­தக பொரு­ளா­தார முத­லீட்டு உத­வி­களை மேம்­ப­டுத்­து­வது என்­பது தொடர்­பாக இதன்­போது கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெறும்.

வர்த்­தக சந்­திப்­பை­ய­டுத்து அர­சியல் கட்­சி­க­ளு­ட­னான சந்­திப்பு நடை­பெறும். அந்த சந்­திப்­பு­களில் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­க­ளு­ட­னான சந்­திப்பு மிக முக்­கி­ய­மா­ன­தாகும். அதன்­போது தமிழ்த் தேசியக் கூட­ட­மைப்­பினர் பல்­வேறு விட­யங்­களை இந்­திய பிர­த­மரின் கவ­னத்­துக்கு கொண்­டு­வ­ர­வுள்­ளனர். காணி விவ­காரம் அர­சியல் தீர்வு விடயம் தடுத்து வைக்­க­ப­பட்­டுள்­ள­வர்­களின் விடு­தலை காணாமல் போனோர் பிரச்­சினை மற்றும் அர­சிய.லமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் என்­பன குறித்து கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­ம­பந்தன் இந்­திய பிர­த­ம­ருக்கு எடுத்­து­ரைப்பார்.

கூட்­ட­மைப்­பி­ன­ருட்­னான சந்­திப்­பை­ய­டுத்து எதிர்க்­கட்சித் தலைவர் நிமல் ஸ்ரீபா­லடி சில்­வாவை இந்­தி­யப்­பி­ர­தமர் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­துவார். இதன்­போது அர­சியல் ரீதி­யான பல விட­யங்கள் குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. குறிப்­பாக புதிய அர­சாங்­கத்தின் 100 நாள் வேலைத்­திட்­டத்­துக்கு எதிர்க்­கட்சி ஆத­ரவு வழங்­கு­வது குறித்து எதிர்க்­கட்சித் தலைவர் நிமால் சிறி­பால டி. சில்வா இந்­திய பிர­த­ம­ருக்கு விளக்­க­ம­ளிப்பார்.

அதன் பின்னர் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வுடன் கொழும்பில் இந்­திய பிர­தமர் பேச்­சு­வார்த்தை நடத்­துவார். இதன்­போது பல விட­யங்கள் குறித்து பேச்சு நடத்­தப்­படும். எனினும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை சந்­திப்­பாரா இல்­லையா என்­பது குறித்து இது­வரை உறு­தி­ப­டுத்­தப்­ப­ட­வில்லை்.

வௌ்ளிக்­கி­ழமை தினத்தில் இறுதி நிகழ்­வாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் இரவு விருந்­து­ப­சாரம் நடை­பெறும். அதில் பிர­தமர் மோடி கலந்­து­கொள்வார். அத்­துடன் முதல்நாள் நிகழ்­வுகள் முடி­வ­டையும்.

இரண்டாம் நாள் சனிக்­கி­ழமை தினத்­தன்று நிகழ்­வுகள் முழு­மை­யாக கொழு­ம்­புக்கு வெளியில் நடை­பெறும். முத­லா­வ­தாக மோடி அனு­ரா­த­பு­ரத்­துக்கு விஜயம் செய்வார். அங்கு சிறி­மகா போதியில் வழி­பா­டு­களை மேற்­கொள்வார். மகிந்த மற்றும் சங்­க­மித்தை ஆகியோர் வருகை தந்த புனித இட­மாக அனு­ரா­த­புரம் காணப்­ப­டு­கின்­றது.

அதன் பின்னர் இந்­திய பிர­தமர் மோடி தலை­மன்­னா­ருக்கு விஜயம் செய்வார். தலை­மன்னார் என்­பது வர­லாற்று ரீதி­யா­கவே இந்­தி­யா­வுடன் தொடர்­பு­பட்ட மிக அருகில் உள்ள பிர­தே­ச­மாகும். இந்­திய பிர­தமர் மோடி தலை­மன்னார் ரயில் நிலை­யத்தை திறந்து வைப்பார். தலை­மன்னார் மடுரோட் ரயில் சேவை­யையும் இந்­திய பிர­தமர் திறந்து வைப்பார். இந்த ரயில் பாதையை இந்­திய நிறு­வனம் நிர்­மா­ணித்­தமை விசேட அம்­ச­மாகும்.

அந்த நிகழ்­வு­களின் பின்னர் தலை­மன்­னா­ரி­லி­ருந்து இந்­திய பிர­தமர் மோடி யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்வார். யாழ்ப்­பா­ணத்தில் இரண்டு முக்­கிய நிகழ்­வுகள் உள்­ளன. முத­லா­வ­தாக யாழ்ப்­பாண கலா­சார நிலை­ய­ததை நிர்­மா­ணி­பப்­ப­தற்­கான அடிக்கல் இந்­திய பிர­த­ம­ரினால் நாட்­டப்­படும்.

அதன் பின்னர் வடக்கு ஆளு­ந­ரினால் வழங்­கப்­படும் பக­லு­ணவு விருந்­து­ப­சா­ரத்தில் கலந்­து­கொள்வார். அதன் பின்னர் யாழ்ப்­பா­ணத்தில் இந்­திய வீட்­டுத்­திட்­டத்தின் கீழ் அமைக்­கப்­பட்­டுள்ள சில வீடு­களை பய­னா­ளி­க­ளுக்கு இந்­திய பிர­தமர் கைய­ளிப்பார். இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்கு இந்த வீடுகள் கைய­ளிக்­கப்­படும். இதுவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த விட­ய­மாகும். யாழ்ப்­பா­ணத்தில் இந்­திய பிர­தமர் வடக்கு முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வ­ர­ரையும் சந்­தித்து பேச்சு நடத்­துவார்.

இந்­திய பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்­பின்­போது அர­சி­ய­ல­மைப்பின் 13 ஆவது திருத்தச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது இந­தி­யாவின் தார்­மீக பொறுப்பு என்றும் அதனை இந்­திய பிர­த­ம­ரிடம் வலி­யு­றுத்­த­வுள்­ள­தா­கவும் வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­தி­ருந்தார். அந்த நிகழ்வின் பின்னர் இந்­திய பிர­தமர் கொழும்பு திரும்­புவார்.

கொழும்பில் அவர் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்­கிரஸ் கட்சி ஆகி­ய­வற்றின் பி்ரதி­நி­தி­களை சந்­தித்து பேச்சு நடத்­துவார்.

அத்­துடன் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் கட்­சியின் பிர­தி­நி­திகள் மற்றும் இந்­திய வம்­சா­வளி தலை­வர்கள் உள்­ளிட்ட பலரை அவர் சந்­தித்து பேச்சு நடத்­துவார். அதன் பின்னர் சனிக்­கி­ழமை இரவு இலங்­கைக்­கான இந்­திய தூது­வரின் இரவு விருந்­து­ப­சா­ரத்தில் அவர் பங்­கேற்பார். அதன் பின்னர் இந்­திய பிர­தமர் புது­டில்லி நோக்கி பய­ணிப்பார்.