செய்திகள்

வெள்ளிக்கிழமை முதல் ஜனாதிபதியின் அதிகாரம் 90 வீதத்தால் குறையும்

19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் வெள்ளிக்கிழமையில் இருந்து ஜனாதிபதி அதிகாரம் 90 வீதத்தால் குறைக்கப்படும் எனஅமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்தார் .

தமது அதிகாரங்களைக் கைவிட விரும்பும் ஒரேயொரு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான் எனவும் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் அவரது அதிகாரம் 90 வீதத்தால் குறைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.