செய்திகள்

வெள்ளைவானில் கடத்தப்பட்டோர் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு: சுசில் கிந்தல்பிட்டிய கோரிக்கை

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வெள்ளைவானில் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் 13 பேர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனநாய கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் சுசில் கிந்தல்பிட்டிய நேற்று வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் தம்மிடம் வழங்கியுள்ள தகவலுக்கு அமையவே காணாமல் போயுள்ள 13 பேரின் பெயருடன் ஏனைய தகவல்களை குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைத்து விசாரணை செய்யுமாறு கோரியுள்ளார்.