செய்திகள்

வெள்ளை மாளிகையில் வெடிகுண்டுப் புரளி: செய்தியாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்ட தகவலை அடுத்து அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

வெள்ளை மாளிகையில், தினமும் செய்தியாளர்கள் சந்திப்பு நடப்பது வழக்கம். இதன்பொருட்டு, இன்றும் பல செய்தியாளர்கள் அறையில் காத்திருந்தபோது , அந்த அறையில் வெடிகுண்டு இருப்பதாக கூறி வெள்ளை மாளிகை அதிகாரிகள் செய்தியாளர்கள் அனைவரையும் அவசரமாக வெளியேற்றினர்.

தொலைபேசி அழைப்பு ஒன்றினூடாகவே இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், இதனை அடுத்து மோப்ப நாய்கள் சகிதம் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது., எனினும், வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.