செய்திகள்

வெள்ளை வானுக்கு பயந்து நோபளத்தில் தஞ்சமடைந்த இலங்கை ஊடகவியாளர்களை அழைத்து வர நடவடிக்கை

கடந்த ஆட்சிக் காலத்தில் வெள்ளை வான் கடத்தல்களுக்கு அஞ்சி நாட்டைவிட்டு வெளியேறி நேபாளத்தில் தஞ்சமடைந்த ஊடகவியலாளர்களை இலங்கை;கு அழைத்து வரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நோபாள பூகம்ப  சம்பவம் தொடர்பாக உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
காத்மன்டு விமான நிலையத்தில் சில காரணங்களால் அவர்களை அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் எவ்வாறாயினும் மிக விரைவில் அவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.