செய்திகள்

வேகப்பந்துவீச்சாளராக விளையாடுவதே கிரிக்கெட்டில் மிகச்சிறந்த விடயம்-சொகைப் அக்தர்

வேகப்பந்துவீச்சாளராக விளையாடுவதே கிரிக்கெட்டில் மிகச்சிறந்த விடயம் என பாக்கிஸ்தானின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சொகைப் அக்தர் த கிரிக்கெட் மன்திலிக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்
அதில் அவர் தெரிவித்துள்ள சில விடயங்கள் வருமாறு
ஏன் நீங்கள் வேகப்பந்து வீச்சாளராவதற்கு விருப்பம் கொண்டீர்கள்?
பதில்-இம்ரான், வக்கார், வசிம் இவர்களில் யாரையாவது போல் வருவதற்கு விரும்பினேன்,இதனையே நீங்கள் என உத்வேகம் எனஅழைப்பீர்கள்,இது பின்னர் எனது கனவாக மாறியது,அந்த வெறி காரணமாக நான் வேகமாக பந்துவீசுவதற்கு வழியை கண்டுபிடித்தேன்,
நான் நீண்ட காலமாக பந்துவீசுவதற்கு ஏற்ற உடல்தகுதியை கொண்டிருக்கவில்லை என எனக்கு தெரிந்தபோது எக்காரணத்தை கொண்டும் வேகத்தை குறைப்பதில்லை என உறுதிபூண்டேன்,எவ்வளவு கேவமாக பந்துவீச முடியுமோ அவ்வளவு வேகமாக பந்துவீச தீர்மானித்தேன்,
எனது வேட்கையை பூர்த்தி செய்வதற்கும் வேகமாக பந்துவீசுவதற்குமான வழிவகைகளை நான் எப்போதும் கண்டுபிடித்தேன்.
வீதிகளில் விளையாடும்போது வக்கார் யூனிஸ் பந்து வீசுவது போன்று பந்துவீசியுள்ளேன்
உத்வேகம் என்பது முக்கியமான விடயம்,அது உங்களை முன்னோக்கி நகர்த்தும்,பின்னர் அது ஓரு வெறியாக மாறும்,பின்னர் அந்த வெறியில் உங்களுக்கு ஓரு வழிமுறை தெரியவரும்,
நான் அந்த வழிமுறையை கண்டுபிடித்தேன், ஓவ்வொரு நாளும் வேகமாக பந்துவீசுவதே அந்த வழிமுறை,
வேகமாக பந்துவீசினால் ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு மேல் விளையாட முடியாது , கால்கள் இடமளிக்காது என தெரிந்திருந்ததும்,எவ்வளவு கேவமாக பந்துவீச முடியுமோ அவ்வளவு வேகமாக பந்துவீசினேன்.
209239
வேகமாக பந்து வீசும்போது அதனை இரசிக்க வேண்டும்,
இரசிகர்களின் கூச்சல்கள் எனது வெறியை மேலும் தீவிரப்படுத்தின,அவர்கள் எப்போதும் என்னை வேகமாக பந்துவீசுமாறு தூண்டிக்கொண்டிருந்தார்கள்,
வேகமாக பந்து வீசுவது எவ்வளவு கடினமானது?
பதில்-கடந்த 18 வருடங்களில் எனது கால்களில் வலியில்லாத நாள் கிடையாது,படுக்கையிலிருந்து பல நாள் வலியுடன் எழும்பியிருக்கின்றேன், நடக்கமுடியாமல் தவித்திருக்கிறேன்.
209235
கேள்வி –உங்களை தொடர்ந்தும் வேகமாக பந்துவீச வைத்த மகிழ்ச்சிகரமான விடயம் என்ன?
பதில்–பாக்கிஸ்தான் நட்சத்திரமே அது.அதுவே எனக்கு மிகப்பெரிய உந்துசக்தி, முதல் தடலை அணி;;க்காக தெரிவுசெய்யப்பட்டவேளை மூன்று நாள்அந்த ஆடைகளுடனே உறங்கினேன்,என்னால் அதனை அகற்ற முடியவில்லை, எனது வாழ்நாள் முழுவதும் அதனுடனேயே இருக்கவிரும்பினேன்.
மேலும் என்னை பார்த்தவுடன் மக்கள் முகத்தில் தோன்றும் சிரிப்பும் என்னை மகிழ்ச்சிப்படுத்தியது.
வேகப்பந்துவீச்சாளராக இருப்பதே கிரிக்கெட்டில் மிகச்சிறந்த விடயம்,நீங்கள் பந்துவீச ஓடும்போது இரசிகர்கள் உங்கள் பின்னாலிருந்து ரசிப்பார்கள்,இரத்த ஓட்டம் அதிகரிக்கும், அதிக ஓக்சிசன் தேவைப்படும்.
மைதானத்தில் இருக்கும் சந்தர்ப்பங்களில் என்னை நானே சந்தோசப்படுத்திக்கொள்வேன்,
எதிரணி வலுவானதாக இருக்கும்போதோ அல்லது மைதானம் ரசிகர்களால் நிரம்பிவழியும்போதோ உற்சாகம் இன்னமும் அதிகரிக்கும்.
குறிப்பாக ஆஸிக்கு அணிக்கு எதராக விளையாடும்போது நான் அதிக உற்சாகமடைவேன்,
வேகப்பந்துவீச்சாளருக்கான மிகப்பெரிய மகிழ்ச்சி என்ன?
பதில்-காலில் வலியில்லாமல் ஒடுவது,எனினும் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச்சில நாட்களே அந்த மகிழ்ச்சி கிடைத்துள்ளது.அவ்வாறான நாட்களில் பந்து வீசிக்கொண்டேயிருக்கலாம் போல தோன்றும்,
விக்கெட்கள் நொருங்கும் சத்தமும் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்க கூடியது.பந்து விக்கெட்டினை வீழ்த்தும் சத்தத்தை கேட்க விரும்புவது உங்களது முதல் விருப்பமாக அமையும்.யோர்க்கள் விக்கெட்டினை வீழ்த்துவது,அந்த சிரிப்பு,அதனால் உண்டான சந்தோசம் வேறு எங்கும் எனக்கு கிடைக்காதது.