செய்திகள்

வேகப்பந்து வீச்சே தென்னாபிரிக்காவின் பலம்

தென்னாபிரிக்கா இம்முறை உலககிண்ணத்தை கைப்பற்றும் வாய்பு;ள்ளதாக தெரிவித்துள்ள அதன் முன்னாள் அணித்தலைவர் கிரஹாம் ஸ்மித் வேகப்பந்து வீச்சாளர்களே அதன் பலம் என குறிப்பிட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவிற்கு இம்முறை சந்தர்ப்பம் உள்ளதாகவே நான் கருதுகிறேன், முன்னைய உலககிண்ணப்போட்டிகளில் விளையாடிய அணிகளை விட இந்த அணியில் துடுப்பாட்டத்திலும், பந்துவீச்சிலும் அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்ல கூடிய வீரர்கள் உள்ளனர்.
பந்துவீச்சே இந்த அணியில் முக்கியமான விடயம் ஏனைய உலககிண்ணப்போட்டிகளுடன் ஒப்பிடும்போது எதிரணிகளை தாக்க கூடிய பந்துவீச்சாளர்கள் இந்த அணியிலேயே இடம்பெற்றுள்ளனர். அவர்களால் விக்கெட்களை கைப்ப்ற்ற முடியும்,எதிரணியை தாக்கி விக்கெட்களைவ Pழ்த்த கூடிய சுழற்பந்துவீச்சாளரும் உள்ளார்.இது தென்னாபிரிக்காவிற்கு மிகப்பெரிய விடயம்.
ஸ்டெயினின் பங்களிப்பு முக்கியமானது,ஆரம்பத்திலேயே விக்கெட்களை அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்,அவரை போன்றுவேகமாகபந்தை வீசவும், அந்த பந்தை ஸ்விங் செய்யவும் ஓருசிலராலேயே முடியும், அது மிகவும் பெறுமதியான விடயம்,
வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை அவர்கள் அதிஸ்டசாலிகள், தற்போது கிரிக்கெட் உலகில் உள்ள தலைசிறந்த மூவரில் ஸ்டெயின், மோhக்கல், பிலான்டர் இடம்பெறுகின்றனர்
அம்லா ஆரம்ப துடுப்பாட்ட வீரர் என்ற வகையில் எதிரணிக்கு தெரியாமலே அதனை பலவீனப்படுத்துவார்,உலககிண்ண போட்டிகளில் தென்னாபிரிக்காவிற்கு முக்கியமானவராக அவர் விளங்குவார், அவர் ஓட்டங்களை பெற தொடங்கிளால்ஏனைய வீரர்கள் மிதான அழுத்தம் குறையும் என குறிப்பிட்டுள்ளார்.