செய்திகள்

வேட்பாளரால் 15 ரூபாவே செலவிட முடியுமென அறிவிப்பு!

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களினால் வாக்காளர் ஒருவருக்கு 15 ரூபா வரையிலுமே செலவிட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று தேர்தல்கள் ஆணைக்குழு நடத்திய கலந்துரையாடலின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் செலவீன கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளுக்கு அமைய வேட்பாளர் ஒருவர் துண்டுப் பிரசுரம் உள்ளிட்டவற்றுக்காக வாக்காளர் ஒருவருக்கு 15 ரூபாவை மட்டுமே செலவிட முடியுமென்று இதன்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

-(3)