செய்திகள்

வேலே சுதாவுடன் வெளிநாடு சென்றுவந்த ஆறு நடிகைகள்

இலங்கையில் மிகப்பெரிய அளவில் போதைபொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுறன த சமந்த குமார என்ற வேலே சுதா கைது செய்யப்பட்ட பின்னர் பல திடிக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் தன்னுடன் சில அரசியல்வாதிகள் இணைந்து போதைபொருள் வியாபாரத்தில் ஈட்டுபட்டனர் என வேலே சுதா தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

அதே போல மீண்டும் ஒரு திடுக்கிடும் வெளியாகியுள்ளதாக அறிய முடிகிறது. அதாவது இலங்கையின் சிங்கள நடிகைகள் சிலர் வேலே சுதாவுடன் வெளிநாடுகளுக்கு சென்று வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நடிகைகள் தனது புகழை பயன்படுத்தி போதைபொருள் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என இதன் மூலம் சந்தேகிக்கப்படுகிறது.

இவ்வாறு ஆறு நடிகைகள் வேலேசுதவுடன் வெளிநாடு சென்றுவந்துள்ளனர்.அவர்கள் யார் என்ற விபரம் பின்னர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.