செய்திகள்

வேலை தேவை என்றால் நாமலிடம் செல்லவேண்டிய நிலையில் இளைஞர்கள்

இலங்கை சமூகத்தில் ஏற்படப்போகும் பாரிய மாற்றத்தின் ஆரம்பமாக இந்த தேர்தல் அமையும் என மூத்த ஊடகவியலாளரும், ராவய பத்திரிகை ஆசிரியருமான விக்டர்ஐவன் சர்வதேச ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

நகரப்பகுதி மக்களுக்கு ஊழலும், ராஜபக்ச குடும்பத்தின் இரும்புபிடியின் கீழ் ஆட்சி நடைபெறுவதும் முக்கியமான விடயங்கள்,இதனை அடிப்படையாக வைத்தே இவர்கள் வாக்களிப்பார்கள்,
நகர்ப்புற வாக்காளர்களை பொறுத்தவரை சட்டமொழுங்கு என்பது முக்கிய விடயமாககாணப்படுகின்றது, சுதந்திரமற்ற நீதித்துறையும் முக்கிய விடயம்,
ராஜபக்ச ஆட்சியின் கீழ் நடைபெற்றுள்ள ஊழலின் அளவு இளையதலைமுறையினருக்கு தெரிந்துள்ளது,ராஜபக்ச குடும்ப ஆட்சி குறித்தும் அவர்களுக்கு தெரியும், அவர்களுக்கு வேலை வேண்டுமென்றால் அவர்கள் நாமல் ராஜபக்சஊடாகவே செல்லவேண்டும்,
சிறுபான்மை சமூகத்தினர் கூட மாற்றம் வேண்டும் என்றே கருதுகின்றனர்,
தற்போதைய நிலையிலிருந்து பின்வாங்க முடியாது,1948 லிருந்து என்ன தவறு நடைபெற்றது என்பது குறித்து மக்களுக்கு நல்ல புரிதல் உள்ளது.எங்களுடைய அரசியல்வாதிகள் எவரும் மக்களை ஒன்றிணைக்கவேண்டும்,அணிதிரட்டவேண்டும் என நினைக்கவில்லை.
தற்போது எமது சமூகத்திற்கு என்ன தவறு நடந்துள்ளது என்பது தெரிந்துள்ளது.அவர்கள் சீர்திருத்தங்களை விரும்புகின்றனர்.இலங்கை சமூகத்தில் ஏற்படப்போகும் பாரிய மாற்றத்தின் ஆரம்பமாக இது அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.