செய்திகள்

வைகோவின் மறுமலர்ச்சி தி.மு.க 22 ஆம் ஆண்டுத் தொடக்க விழா (படங்கள்)

மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 22 ஆம் ஆண்டுத் தொடக்க விழா, தலைமைக் கழகம் தாயகத்தில், இன்று புதன்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கழகக்கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கினார்.

துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ், மாவட்டச் செயலாளர்கள் காஞ்சிபுரம்-பாலவாக்கம் க.சோமு, வடசென்னை -ஜீவன், மத்திய சென்னை -ரெட்சன் அம்பிகாபதி, தென்சென்னை -வேளச்சேரி மணிமாறன், செய்தி தொடர்பாளர் கோ.நன்மாறன், தேர்தல் பணிச் செயலாளர் கே.கழககுமார், மகளிர் அணி மாநிலச் செயலாளர் குமரி விஜயகுமார், சிறுபான்மை பிரிவுச் செயலாளர் முராத் புகாரி, ஆபத்து உதவிகள் அணிச் செயலாளர் பூவை கந்தன், தலைமைக் கழகச் செயலாளர் கவிஞர் தமிழ்மறவன், தலைமைக் கழக துணைச் செயலாளர் மலுக்காமலி, அணிகளின் மாநிலத் துணைச் செயலாளர்கள் எம்.எல்.எப். ஜார்ஜ், மல்லிகா தயாளன், மணவை தமிழ்மாணிக்கம், மு.காந்தி, பகுதிச் செயலாளர்கள் தென்றல் நிசார், டி.ஜெ.தங்கவேலு, எஸ்.ஆர்.விசு, எம்.இ.நாசர், பெரம்பூர் பாஸ்கர் உள்ளிட்ட ஏராளமான கழகத்தினர் கலந்து கொண்டனர்.

இன்று இரவு 7 மணி அளவில், ஆலந்தூர், ஆதம்பாக்கம் பகுதி, டாக்டர் அம்பேத்கர் திடலில் (பரங்கிமலை இரயில் நிலையம் அருகில்) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கழகப் பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றுகிறார்.

vaiko

vaiko2

vaiko3