செய்திகள்

வைத்தியசாலை மேற்பார்வைக்கு தேசிய சபை நிறுவ நடவடிக்கை

வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் உரிய முறைகளில் வழங்கப்படுகின்றனவா என்பது தொடர்பில் கண்டறிவதற்காக தேசிய சபையொன்றை நிறுவ சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதற்காக, அனைத்து வைத்தியச் சங்கங்களையும் இணைக்கும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

நோயாளிகள் தொடர்பில் தனித்தனியே அவதானம் செலுத்துமிடத்து, அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் தொடர்பில் திருப்தியற்ற நிலை காப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் தங்களது கடமைகளை சரிவர முன்னெடுக்காத சுகாதார சேவை உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.