வைத்தியர்கள் இன்மையால் நோயாளிகள் அவதி! கண்டித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்)
நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட தலவாக்கலை லிந்துலை வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மையால் 14.05.2015 அன்று வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த 200 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் பல சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர்.
காலை 7 மணிக்கு வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் 10 மணி வரை வைத்தியர்கள் இன்மையால் காத்திருந்ததோடு பசி பட்டினியுடன் சிலர் மயங்கி இருந்தனர்.
இதன் காரணமாக வைத்தியர்களை உடனடியாக நியமிக்குமாறு கோரியும் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கோரியும் இப்பகுதியை சேர்ந்த சுமார் 200ற்கும் மேற்பட்ட மக்கள் தலவாக்கலை டயகம பிரதான வீதியை மறைத்து லிந்துலை வைத்தியசாலைக்கு முன்பு சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படனர்.
இந்த வைத்தியசாலையில் தொடர்ச்சியாக பல்வேறுப்பட்ட குறைப்பாடுகள் காணப்படுவதாகவும் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் உடனடியாக வைத்தியசாலையில் இருக்கின்ற குறைபாடுகளை நிவரத்தி செய்யுமாறும் மலையக அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் கூடுதலாக கவனம் செலுத்தமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இதன் பிறகு லிந்துலை பொலிஸாரின் தலையீட்டின் பின் ஆர்ப்பாட்காரர்கள் கலைந்து சென்றனர்.