செய்திகள்

வை ராஜா வை ஹிட்! இயக்குநர் ஐஸ்வர்யா அறிவிப்பு

மே 1-ம் தேதி வெளியான வை ராஜா வை படம் ஹிட் என அந்தப் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

சென்ற வாரம் மே 1 அன்று உத்தம வில்லனும் வை ராஜா வையும் வெளியாக இருந்தன. ஆனால், திடீரென கிளம்பிய பிரச்னைகளால் உத்தம வில்லன் அன்றைய தினம் ரிலீஸாகவில்லை. இதனால் உத்தம வில்லன் வெளியாகவிருந்த தியேட்டர்களில் வை ராஜா வை படம் திரையிடப்பட்டது. மக்களும் டிக்கெட்டை ரத்து செய்யாமல் வை ராஜா வை படத்தைப் பார்த்தார்கள். இதனால் அந்தப் படத்துக்கு முதல் நாளன்று எதிர்பாராத வசூல் கிடைத்தது.

படம் ஹிட்டானது பற்றி அப்பட இயக்குநர் ஐஸ்வர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வை ராஜா வை படத்தை ஹிட்டாக்கிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. படத்தின் நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன். என் வாழ்வில் உள்ள ஆண்களுக்கும் நன்றி. அப்பா ரஜினிகாந்த், கணவர் தனுஷ், மகன்கள் யாத்ரா, லிங்கா… நீங்கள் என் வாழ்வுக்கு அர்த்தம் கொடுத்துள்ளீர்கள். கடவுளுக்கு நன்றி.