செய்திகள்

வௌ்ளவத்தை ஹோட்டலில் பாரிய தீ: 4 தீயணைப்பு வாகனங்கள் விரைவு

வெள்ளவத்தை, மரைன் டரைவ் வீதியில் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தீ பரவியுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5.37 அளவில் 119 என்ற பொலிஸ் அவசர சேவை பிரிவிற்கு சம்பவம் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.

இதனை தொடர்ந்து 4 தீயணைப்பு வாகனங்கள், சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக தீயணைப்புப் பிரிவு தெரிவிக்கின்றது. விபத்தில் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை.