செய்திகள்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைச்சுப் பதவிகளில் ஐக்கிய தேசிய கட்சியை முந்தியது

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர் , பிரதி அமைச்சர் மற்றும் இராஜங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 80வரை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் அதிகமான பதவிகளை பெற்று  ஐக்கிய தேசிய கட்சியினரையும் முந்திச் சென்றுள்ளர்.
தற்போது அரசாங்கத்தில் மொத்தமாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 39 பேரும் , பிரதி அமைச்சர்கள் 27 பேரும் , இராஜங்க அமைச்சர்கள் 14 பேருமாக 80 பேர் பதவிகளை வகிக்கின்றனர்.
இவர்களில் 35 பேரே ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் என்பதுடன் மற்றைய 45 பேரில் 36 பேர் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சார்ந்தவர்களாவே இருக்கின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.