செய்திகள்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாலோ , ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பாலோ என்னை மாற்ற முடியாது : பிரதமர்

ஜனவரி 8ம் திகதி மக்கள் வழங்கிய ஆணையை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாலோ , ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பாலோ மாற்ற முடியாதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியினரும் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினரும் என்னை மாற்ற வேண்டும் என கூறுகின்றனர். அப்படி மாற்ற வேண்டுமென்றால் ஒரெ வழி தேர்தலுக்கு சென்று மக்கள் ஆணையை பெற்றுக்கொள்வதுயாகும். நாம் ஜனவரி 8ம் திகதி மக்கள் வழங்கிய ஆணையின்படியே இருக்கின்றோம்.
இந்த ஆணையை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாலோ , ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பாலோ மாற்ற முடியாது. வேண்டுமென்றால் தேர்தலுக்கு வாருங்கள். அதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். என அவர் தெரிவித்துள்ளார்.